Tuesday, August 29, 2023

இது முதன்முறை அல்ல

கொஞ்சம் யோசித்துப் பார் விஜயகுமார்

இப்போது நீ எப்படிக் கிடக்கிறாயோ அப்படியே

எத்தனை பேரை நினைத்து உறங்காமல் கிடந்திருக்கிறாய்?!

இடத்தையும் வயதையும் ஆளையும் தவிர எதுதான் மாறியிருக்கிறது?!

இந்த உலகத்தில் நேசிக்க எதுவுமே இல்லாதது போல்

திரும்பத் திரும்ப காதலில் விழுகிறாய்

நீ தவறவிட்ட காதல்கள் எத்தனை

உன்னைத் தவற விட்ட காதல்கள் எத்தனை

நீ பின்தொடர்ந்த எல்லாப் பெண்களும் வேறொருவரோடு போயிருக்கிறார்கள்

உன்னைப் பின்தொடர்ந்த பெண்களைக் காயப்படுத்தியிருக்கிறாய் 

நீ எப்போதுமே முட்டாளாகத்தான் இருந்திருக்கிறாய்

கண்கள் திறக்காத பூனை குட்டிக்கு 

எலும்புத் துண்டுகளை எடுத்துப் போவாய்

நேற்றுப் பார்த்த பெண்ணுக்கு மஞ்சள் கயிறை

போதும் போதும் 

போட்ட விதைகள்  மறுநாள் மலர்ந்தால் 

யார்தான் பயப்படமாட்டார்கள்?

No comments:

Post a Comment