Friday, January 4, 2019

ஹேப்பி நியூ இயர்!

அன்றொரு நாள் உனக்கொரு 

வாழ்த்தை அனுப்பியிருந்தேன் 

அப்போதெல்லாம் நாம் 

கூப்பிடும் தொலைவிலிருந்தோம் 

நம்பரைக் கூட அழிக்காமலிருந்தேன் 

நெற்றியில் சரியும் உன் 

கற்றை முடிக்கு நான் அடிமையாய்க் கிடந்தேன் 

இப்போது முகப்புத்தகம்வழி வருகிறது 

உன் பதில் வாழ்த்து 

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்துவிட்டது பார் 

இணையம் எவ்வளவு வேகமாகிவிட்டது பார் 

ஒருத்தி முடிவெடுப்பதற்குள் 

என்னென்னவோ ஆகிவிட்டது பார் 

இந்த உலகிற்கு எவ்வளவு அவசரம் பார் 

அதற்குள் நான்காம் சுற்றைத் துவங்கிவிட்டதைப் பார்

No comments:

Post a Comment