Thursday, November 2, 2023

முதலமைச்சரின் ஆய்வு உதவித்தொகை முழுமையாகப் பலன் தரட்டும்!

தமிழ்நாட்டிலுள்ள மாணாக்கர்களிடையே ஆராய்ச்சித் திறனை வளர்க்கவும், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், ‘முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்ட’த்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேர்வையும் உதவித்தொகை வழங்கும் பணியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. விண்ணப்பிப்பதற்கோ, தேர்வு எழுதுவதற்கோ எந்தக் கட்டணமும் இல்லை என்பது இதன் சிறப்பு.

இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் போட்டித் தேர்வின் அடிப்படையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் 60, அறிவியல் பிரிவில் 60 என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வானவர்கள் தமிழக அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர இயலும். இந்த உதவித்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் பெரிதும் உதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், ஓர் ஆய்வு மாணவனாக, அண்டை மாநிலமான கேரளத்தில் இத்தகைய உதவித்தொகை செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

இணைப்புக் கோளாறு:

16.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையின் முதல் பக்கத்தில், இத்திட்டத்துக்கான அரசாணையை (27.02.2023 தேதியிட்டது) வாசிப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டுரை பிரசுரமாகும்வரை இணைப்பு வேலை செய்யவில்லை. மாதம் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள் அரசாணையில்தான் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உதவித்தொகை குறித்த புரிதலை அரசாணை மாணவர்களுக்கு அளிக்கும்; விண்ணப்பிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கவும் உதவும். எனவே, அதற்கான இணைப்பு உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

எனக்குக் கிடைத்த அரசாணை நகலில் முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.25,000 எனவும், கடைசி வருடத்துக்கு மாதம் ரூ.28,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடைநிற்காமல் கல்வி கற்கும் ஒருவர் 23 வயதில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, முனைவர் பட்ட ஆய்வுக்குள் நுழைய இயலும்.அவர்களைப் பொறுத்தவரை இது கணிசமான தொகைதான். வயது வரம்பு இல்லை என்பதால் திருமணமானவர்கள், குழந்தை உள்ளவர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உயர்கல்வி பயில இது நல்வாய்ப்பு. அதே நேரத்தில்,அவர்கள் எதிர்கொள்ளும் செலவுகளுடன் ஒப்பிட்டால்,இத்தொகை போதாது. இவர்களுக்குச் சிறப்புக் கவனமோ அல்லது தொகை உயர்த்தியோ வழங்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் என்றால் வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.

கூடுதல் நிதி அவசியம்:

கேரளம் முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ.31,000, மூன்றாம் வருடத்துக்கு ரூ.35,000 வழங்குகிறது; இதர செலவுகளுக்காக அனைத்துப்புல மாணவர்களுக்கும் வருடம் ரூ.20,000 மற்றும் மாதம் 10% வாடகைப்படியும் வழங்குகிறது. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் பரப்பளவில் சிறிய, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளம் வழங்கும் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகைகளின் எண்ணிக்கை 100. வரும் வருடங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

மூன்று வருடங்களில், அதுவும் அரசுக் கல்லூரிகளில் ஆய்வை முடிப்பது கடினம். குறிப்பாக அறிவியல் புலத்தில். எனவே, ‘அரசுக் கல்லூரிகளில் மட்டும் ஆய்வு செய்வதற்கான உதவித்தொகை’ என்னும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் தவிர்த்து, ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களுக்குள் (சிஎஸ்ஐஆர், ஐஐடி, என்ஐடி, மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவை), தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய இந்த உதவித்தொகை ஒரு நல்வாய்ப்பு; ஆய்வு வசதிகளும் மிகுதி. வருடத்துக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் ஒரு நாட்டில் போட்டி அதிகம்; பட்டம் பெற்றது கல்லூரியிலா/பல்கலைக்கழகத்திலா/மத்திய அரசு நிதி நல்கும் கல்வி நிறுவனத்திலா என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் தர அளவீட்டுக் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக் கல்லூரிகளில்தான் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல், ‘அரசுக் கல்லூரிகளில் முதுநிலை பயின்ற மாணவர்களுக்கான உதவித்தொகை’ எனத் திருத்தப்படுமானால் மிக மகிழ்ச்சி. அரசுக் கல்லூரிகளில் ஆய்வுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தத் திட்டங்கள் வகுப்பது முக்கியம். மிக அடிப்படையாக மொழி, கலை, அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்தப் புல ஆய்வுக்கும் உள்நாட்டு/பன்னாட்டு ஆய்விதழ்களை வாசிப்பதற்கான வசதிகள், சார்ந்துள்ள பல்கலைக்கழகங்களால் செய்துதரப்பட வேண்டும். இத்திட்டத்தின்மூலம் அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள், அக்கல்லூரி சார்ந்துள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகளை, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு நிகரான உரிமையுடன் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள்:

பொதுவாகவே, கல்வி உதவித்தொகை சரியான காலத்தில் பயனாளிகள் கைகளில் கிடைப்பதில்லை. சிலரின் குடும்பச் செலவுகளே இந்த உதவித்தொகையை நம்பியிருக்கும் என்பதால், 120 பேருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தேதிக்குள் தொகை போய்ச்சேர்வது விதிமுறையாக்கப்பட வேண்டும்.

உதவித்தொகை மூன்று வருடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அறிவியல் புலங்களில் மூன்று வருடங்களில் முனைவர் பட்டம் பெறுவதென்பது இந்திய அளவில் பெருவசதி பெற்ற, மத்திய அரசு ஆய்வு நிறுவனங்களிலேயே சாத்தியமற்ற ஒன்று. 30 வயதை நெருங்கும் ஒருவர், தன் ஆய்வுப் பணியின் பாதியிலேயே கைவிடப்பட்டதாகவே உணர்வார். எனவே, ஐந்து வருட காலம் உதவித்தொகை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

இந்த சிறந்த திட்டத்தைத் தொடங்கும்போதே, மேற்சொன்னவற்றைக் குறித்து வல்லுநர்களோடு அரசு ஆலோசித்து மாற்றங்களைச் செய்யுமானால் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

(நடுப்பக்கக்கட்டுரை, தி இந்து தமிழ் திசை, 02-11-2023) 







Sunday, September 3, 2023

நலம் விரும்பிகள் சொல்கிறார்கள்

முகம் கொஞ்சம் பொலிவடைந்திருப்பதாக

பற்கள் கொஞ்சம் வெளியே தெரிவதாக

இப்போதுதான் காணும் படி இருப்பதாக

நான் சொல்கிறேன்

போகும் வழியில் பூக்கள் மலர்வதாக 

உலகம் என்னை கண்டு கொள்வதாக 

என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டதாக

எனக்கு மட்டும் சில நட்சத்திரங்கள் தெரிவதாக 

ஒரு உயிர் இன்னொரு உயிரால் அங்கீகரிக்கப்படுவதாக 



Saturday, September 2, 2023

மூன்றாம் முறையாக

நேற்று மூன்றாம் முறையாகப் 

பூனை பிரண்டிவிட்டது

விஷயம் அறிந்தவர்கள் கண்டிக்கிறார்கள்

தெருவில் போவதையெல்லாம்

வீட்டிற்குள் விடுவதை நிறுத்து

கதவை அடை, துரத்தி அடி

செலவாகும் நேரத்தையும் பணத்தையும்

நினைத்துப் பார் என்றெல்லாம்.

காயப்பட்டதற்கெல்லாம் 

துரத்தி அடிக்க முடியாது

மனிதர்கள் என்றால் பரவாயில்லை

பூனைக்கு என்ன தெரியும்?!

மனிதர்களிடம் இல்லா சிநேகத்தை 

மிருகத்திடம் எதிர்பார்ப்பதா?

மேலும்

காயப்படுத்தியவர்களையெல்லாம்

துரத்திவிட்டுத்தான் இப்போது பூனையொடு வாசம்

பூனையையும் துரத்திவிட்டால் 

எனக்கு அழையா விருந்தினர் யார்?

நான் வரக் காத்திருப்பவர் யார்?

என்னை அழைக்கப்போவது யார்?

என் சருமத்தில் உரசப்போவது யார்?


Thursday, August 31, 2023

தாதிகளின் கைகள்

மருத்துவமனையில் கிடக்கிற  

என் தோழியை நினைத்துக் கொண்டிருந்தேன்

முன்போர்நாள் நள்ளிரவில்

அங்குதான் நானும் கிடந்தேன்


முகம் மறைத்த தாதி ஒருத்தி 

பெயர் நினைவிலில்லை

கேட்டது எதுவும் தங்கவில்லை

தொட்ட இடத்தில் ரேகைகள் ஒட்டியிருக்கிறது 

பட்டாம்பூச்சியின் சிறகை 

நரம்பில் ஏற்றியதும்

வலிக்கிறதா எனக் கேட்டதும் 

கூடவே தங்கிவிட்டது 


பின்போர்நாள் பல் மருத்துவமனையில்... 

அது வேறொரு உலகம் 

அங்கு எதுவும் கேட்பதில்லை 

இருவர் மூச்சுவிடும் சப்தத்தைத் தவிர 

அங்கு எதுவுமே நடப்பதில்லை 

ஒருவர் இன்னொருவரின் கைக்குள் தன்னை 

முழுமையாக ஒப்படைப்பதைத் தவிர 

அங்கொருத்தி என் முகத்தைப் 

பாந்தமாகக் கைகளில் ஏந்தினாள் 

என் கறைகளைப் புனித நீரால் கழுவினாள் 


நோய்மையின் மீட்சி 

மருந்துகளில் அல்ல 

தாதிகளின் கரங்களில்  

இனி 

உடல் என்னைக் கைவிடுகையில் 

மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

காதலிகள் என்னைக் கைவிடுகையில் 

பல் மருத்துவமனைக் கட்டிலில் கிடப்பேன்

தாதிகளின் கைகளுள் கட்டுண்டு கிடப்பேன்.


Tuesday, August 29, 2023

இது முதன்முறை அல்ல

கொஞ்சம் யோசித்துப் பார் விஜயகுமார்

இப்போது நீ எப்படிக் கிடக்கிறாயோ அப்படியே

எத்தனை பேரை நினைத்து உறங்காமல் கிடந்திருக்கிறாய்?!

இடத்தையும் வயதையும் ஆளையும் தவிர எதுதான் மாறியிருக்கிறது?!

இந்த உலகத்தில் நேசிக்க எதுவுமே இல்லாதது போல்

திரும்பத் திரும்ப காதலில் விழுகிறாய்

நீ தவறவிட்ட காதல்கள் எத்தனை

உன்னைத் தவற விட்ட காதல்கள் எத்தனை

நீ பின்தொடர்ந்த எல்லாப் பெண்களும் வேறொருவரோடு போயிருக்கிறார்கள்

உன்னைப் பின்தொடர்ந்த பெண்களைக் காயப்படுத்தியிருக்கிறாய் 

நீ எப்போதுமே முட்டாளாகத்தான் இருந்திருக்கிறாய்

கண்கள் திறக்காத பூனை குட்டிக்கு 

எலும்புத் துண்டுகளை எடுத்துப் போவாய்

நேற்றுப் பார்த்த பெண்ணுக்கு மஞ்சள் கயிறை

போதும் போதும் 

போட்ட விதைகள்  மறுநாள் மலர்ந்தால் 

யார்தான் பயப்படமாட்டார்கள்?

Tuesday, June 13, 2023

Can Science Liberate? - Jeyamohan

Can science benefit humanity? Will freedom, food, clothing, shelter and satisfaction can be attained through it? We trained to say 'yes'. Those who deny science are conservatives like racists and communalists. Science liberated us from their grip and gave us this level of freedom, worldly pleasure and contentment. Those who look down the present-day society created by science as a decadent, and praise the feudalism of bygone eras, refuse to see the historical reality.

Science and modernity are intertwined. Science and rationalism are almost the same thing. So modern people should fully embrace science. In the past, there were only two sides in the knowledge base in our society: Acceptors and Deniers of Science. Those who accepted science spoke in the language of logic, while those who rejected it spoke in the voice of faith. Science gradually became a field of knowledge and religion. Whether one belongs to the religion of science or another is become a question.

Today the triumph of science is evident. Today we see those against science trying to 'prove' how scientific their fanaticisms like religion, casteism and language are. We are told that even blatant historical distortions and superstitions have 'scientific proof'. In fact, today, everything is shown to us as scientific, from the impact of face cream to satellites being deflected by the power of the Saneeswaran temple.

Today many questions arise from the supporters of science about the limits and harms of science. When a scientific discovery like cloning or artificial intelligence is presented, warnings arise from the advocates for science. Some postmodernist today denies the dominance of science by saying science itself has become an authority and many of the scientific principles are just a tool for authoritarianism.

The period from 1920 to 1980 can be roughly considered as the pinnacle of trust in science. Many of the great achievements of science were turned into products that directly controlled and created the world in the 1900s. Advanced transportation and mechanized modern manufacturing completely revolutionized economics. Modern communication tools gave way to modern education. The resulting societies coalesced into modern nations. A very strong army and a centralized government emerged. Democracy was born.

Both world wars were the result of science. Modern armies created modern governments. Modern states sought new dominions. As a result, world wars occurred. Yet faith in science continued to grow. Science also helped to repair the ravages of war. But the destruction wrought on nature by consumerism as a result of science was documented in the 1970s. Powerful governments created by science suppressed individual rights. Scientific investment leading to further exploitation is pointed out. The golden era of scientism is over.

Bertrand Russell was the central philosophical thinker of the scientific age. He was one of the primary authors cited by those who worked against superstitions and orthodoxies around the world in the last century. He himself became the sage of those who worshiped science as religion. He wrote a short book 'The Impact of Science On Society' in 1952. This book was translated into Tamil by an undergraduate, A. Natarasan in the 1960s and published by Rajeshwari Bookstore at a price of 4 rupees. Its reprint histories show that it has remained a book that has not been widely read. It was never printed again. I have the first edition. I read it again recently, forty-one years later.

Photo: www.jeyamohan.in

It is striking today that Russell did not see science as a liberating tool in itself. He elaborates on the constructive contributions of science. Mankind has tried to understand the universe, nature, and human life through beliefs and symbols throughout history. Empirical knowledge also came into play, which helped them to construct worldly life. It was that empirical knowledge that later developed as a scientific methodology.

Humanity has two conflicting intellects. One is to create and maintain continuity of thought. What matters to that party is what the ancestors have told. It continues to learn the past and takes it to the next generation. Another intellectual activity is exploring and learning new things. For that, the words of ancestors are important only as a prediction. Violation is its way. Among these two intellectual activities, the first type of activity had more space and power in the past. Religionists and ritualists are of this type. They monitored and oppressed the other type. Advancements in human thought took place, overcoming that oppression.

The era of science is the dominance of the second type. They created continuous progress with complete independence. They scrutinized and mercilessly rejected the past with experiments. They constantly scrutinize and reexamine their own ideas, reject them when they become outdated, and move on. Russell notes that the age of science emerged from the sixteenth century and gradually gained momentum, and reached its highest point in the twentieth century.

Russell mentions the following as two consequences of science. Knowing and using this world. Knowledge becomes application, and application provides the impetus to learn more. We call knowledge as science and application as technology. Thus the continuous development of knowledge and application has created the modern world of today. He consistently emphasizes this and says that further development of science is the only way forward for mankind.

But he also stresses a few points in this book. First, scientific discoveries do not automatically produce benefits for mankind when they are put to use. No machine has freed man from labor; on the contrary, it has created greater enslavement. A new machine created a greater greed for profit in the capitalists and made the workers industrial slaves.

Russell gives us several examples. In Lancashire, children were recruited to weave as young as 5 years old in the 1820s. They were tied to machines and made to work 16 hours a day. Overseers were appointed to whip them continuously to keep them from falling asleep. As shipping technology evolved from steamships to oil tankers, export opportunities increased. Cotton arrived from all over the world. Therefore, the industry had to be developed manifold. New types of weaving machines came. And yet the production increased. As a result, slavery became crueler. In fact, any Labor Act was promptly defeated in Parliament until 1824.

A scientist named Whitney invented a machine for cleaning cotton in 1793. Using that, a man could clean fifty times more cotton. As a result, cotton production and trade multiplied, became more and more profitable, and many people of color were drawn into the cotton industry as slaves. Slavery was abolished in 1787. But this kind of industrial slaves were emerging. They had no choice; they sold themselves.

Today we still believe that technology will make labor easier. Not so. Russell shows just the opposite happens every time. There is no possibility that human liberation and human welfare can arise spontaneously through science or technology. They should be developed gradually with emancipatory ideas and activities that make them populist. Otherwise, he shows that science and technology will only create more slavery. What he presents in this book is the importance of modern ideas aimed at human welfare and liberation. He says that what we have to do is to understand science from the foundation of thoughts and deal with science.

Russell says as one of the side effects of science is that it makes modern armies almost invincible to people. Modern governments cannot be defeated by any populism or counter-revolution because the army is actually the government. Never in history have governments been as powerful as today's governments. Even Roman emperors like Caligula and Nero were able to oppress other nobles. Rome had no authority over the common people. But today's dictators can monitor and oppress every citizen individually.

What is against that oppression is the human consciousness of freedom. Modern technology can be used to its advantage. Human beings from all over the world can gather together. The facilities provided by modern technology can be used against the oppression of one person by another.

But Russell also says it's not easy. Today governments can create outrageous beliefs through modern science. Anti-scientific mindsets can be established in the minds of thousands of people at a young age with science. What thinkers have to do today is to fight with that great power.

In this book, he suggests some ways to use science to create a healthy society in the future. The independence of science is one of them. It should not be a servant of government or business. Decentralization is another. State power is controlled by the people's bodies which are equal to the governments. Three world-influencing ideas. But he speculates that these will take many generations to develop and that they will be driven through various upheavals and destructions.

Even today, looking after three-quarters of centuries, Russell's ideas are still fresh. The fears, confusions, and nightmares they evoke persist today. We see that the predictions of scientists about the future have become ridiculously meaningless when compared to this. In the 1950s, scientists were predicting that chemical fertilizers would eliminate world hunger and that the balance of modern weapons would eliminate world wars.

Richard Feynman quipped that 'Philosophy of science is as useful to scientists as ornithology is to birds. It's true, birds can fly freely. But birds do not know how one bird's life affects another and how each is related to the other. The whole picture will be developed only by the ornithologist.

This book advocates science but says that morality should rule over science. Presenting the modern ethics of humanity and the modern philosophy that creates it. Today its need is felt more deeply.


References:

 

1.     Saneeswaran - refers to the divine personification of the planet Saturn in Hinduism https://en.wikipedia.org/wiki/Shani

 

2.     Originally from Tamil: அறிவியல் விடுதலை அளிக்குமா? https://www.jeyamohan.in/183412/

tratranslated with permission




Sunday, June 4, 2023

பள்ளிக்கல்வி - ஒரு விவாதம்

கேரளப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு நிகழ்வில் மாணவர் - ஆசிரியர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். உடன் கர்நாடக, ஒரிசா, கேரள மாநில மாணவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப மாநில/ஒன்றிய/தனியார் பள்ளிகளில் பயின்றிருந்தனர். அமர்வின் நோக்கம் எங்களுடைய பள்ளிக்கால அனுபவங்கள், எவற்றையெல்லாம் ஆசிரியர்கள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுவதாக இருந்தது.

கற்பித்தல் என்பதைத் தாண்டி தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுடன் இணைத்து சிலவற்றைப் பேசலாம் என எண்ணினேன். தாய்மொழிக் கல்வி, நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, போட்டித் தேர்வுகள், இட ஒதுக்கீடு இவற்றைக் குறித்த தமிழ்நாட்டின் பார்வை பிற மாநிலங்களைக் காட்டிலும் தனித்துவமானதென்பதாலும், அண்மையில் கல்லூரிச் சுற்றுலா உள்ளிட்ட சில புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாலும் அவற்றைக் குறித்து ஆசிரியர்களின் சிந்தையைத் திருப்பலாம் என நினைத்தேன். அவ்வரங்கில் நிகழ்த்தவற்றைக் குறித்து இங்கே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

முதலாவதாக அரங்கு அமைக்கப்பட்டிருந்த விதம்: முகாமில் ஆசிரியர்களே மாணவர்கள், எனவே அவர்கள் மேடைக்குக் கீழ். "ஆசிரியர்கள் மாணவர்களாகவும், மாணவர்கள் ஆசிரியர்களாகவும் இருக்கப் போகும் இந்த நிகழ்வு எனக்கு வித்தியாசமாக இருக்கிறது, எப்படித் துவங்குவதெனத் தெரியவில்லை - மரியாதைக்குரிய மாணவர்களே... நான் தமிழகத்தை சேர்ந்தவன், பள்ளி, கல்லுரிப் படிப்புகளை அரசுக் கல்வி நிறுவனங்களில் முடித்தவன், தமிழகத்தின் பார்வையிலிருந்து சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்." எனத் துவங்கினேன்.

புகைப்படம்: சமதா மேத்யூ 

மாணவர் இருக்கையும் ஆசிரியர் இருக்கையும் நம் குணத்தையே மாற்றிவிடும் போலும். சலிப்பைக் காட்டும் உடல்மொழி, திறன்பேசியை நோக்குதல், அடுத்திருப்பவருடன் உரையாடல் போன்ற மாணவர்களுக்குரிய குணாம்சங்கள் ஆசிரியர்களிடமும், இவற்றைக் கண்டும் பொறுமையிழக்கும் ஆசிரியரின் குணம் எங்களுக்கும் தொற்றிக்கொண்டதையும் உணர முடிந்தது. ஆனால், இங்கே இரு தரப்பினரும் மற்றவர்மேல் விமர்சனம் வைக்கும் இடம். இதே ஜனநாயகத்தன்மை எல்லா வகுப்பறைகளிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் வராமலில்லை.

முதல் சுற்றின் விவாதப் பொருள் பயிற்றுமொழி. கேரளம் மற்றும் கர்நாடகத்தில் பத்தாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வி உண்டு. கர்நாடக நண்பர் தாய்மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறுவது கடினமாக இருந்தது எனவும், அறிவியலை சொல்லித் தருவதை விட செயல்முறைக் கல்வி இருந்திருந்தால் கற்பது எளிதாக இருந்திருக்கும். எப்படியென்றால், முப்பட்டகம் வெள்ளொளியை ஏழாகப் பிரிக்கிறதென்பதை வகுப்பறையில் நிகழ்த்திக் காண்பிப்பது கற்றலை இன்னமும் உற்சாகமானதாக்கியிருந்திருக்கும் என்றார். ஆசிரியர்கள் அவர் எடுத்துக்காட்டிற்குச் சொன்னதைப் பதினொன்றாம் வகுப்பு செய்முறைப்பாடம் எனப் பதிலளித்துக் கடந்தனர்.

பள்ளிகளின் மொழிக் கொள்கை தொடர்பான விமர்சனத்தைக் கல்லூரி மாணவர் ஒருவர் வைத்தார். தனியார் பள்ளியில் படித்தவர், அங்கேயும் பள்ளி வளாகங்களில் ஆங்கிலத்தில் பேசுவது கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் இருந்தது என்றார். மொழி கற்றலில் இவ்வளவு இறுக்கம் வேண்டமெனவும் கேந்திரிய வித்யாலயங்களில் தாய்மொழிக் கல்விக்கே வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டார்.

மொழி தொடர்பான விவாதத்தில், தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்வியில் முன்னிலையில் இருக்கும் வடக்கு ஐரோப்பிய நாடுகள் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கின்றன, மொழிச்சிறுபான்மையினருக்கு அவர்களின் தாய்மொழியைக் கற்கவும் தாய்மொழியிலிருந்து உள்ளூர் மொழிக்கு மாறவும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. மேல்நிலைக் கல்வியை மலையாளத்தில் கற்பிக்கவும் பாடப்புத்தகங்கள் வெளியிடவும் கேரள அரசை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும் என்றேன். சில வருடங்களுக்கு முன் கேரள அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் அங்கு சென்று வந்ததையும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சில வாரங்களுக்கு முன்பு கேரளத்திற்கு வந்ததையும் அவர்களுக்கு நினைவுறுத்தினேன். கூடவே தமிழகத்தில் மேல்நிலைக் கல்வி மட்டுமல்ல, கல்லூரிக் கல்வியையும் தமிழில் கற்க இயலும் எனக் கூறினேன். கலை, அறிவியல் பாடங்கள் அரசுக் கல்லூரிகளில் தமிழ் வழியில் கற்பிக்கப்படுவதையும் அத்தகைய வகுப்பில் இருந்துதான் வந்திருக்கிறேன் என்பதையும் ஆங்கிலத்தில் சொன்னேன். தமிழ் வழிக்கல்வி என்னுடைய ஆங்கிலத்தை பாதிக்கவில்லை, மாறாக உதவியிருக்கிறதென்றேன். கூடவே தற்போது மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான புத்தகங்களை இந்தியில் வெளியிட்டு இருப்பதையும் சுட்டி என் வாதங்களுக்கு வலுவைக் கூட்டினேன். தாய்மொழிக் கல்வியை நீங்கள் பிற்போக்குத்தனமாகப் பார்ப்பீர்கள், ஆனால் தாய்மொழியில் கற்க விரும்புவர்களுக்கான வாய்ப்பை நாம் உருவாக்கித்தர வேண்டுமில்லையா? எனக் கேட்டேன்.

கேரளக் கல்லூரி மாணவர், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் பொறியலில் ஆர்வம் இல்லை என்கிறபோது, மதிப்பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் விளையாட்டு, இன்ன பிறவற்றிற்கும் வழங்கப்பட வேண்டும், விளையாட்டுப் பிரிவேளையைக்கூட அபகரிப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டார். அதை ஆமோதித்து, எழுத்தாளர் பெருமாள்முருகன் கட்டுரையில் இருந்த கருத்தொன்றைச் சுட்டினேன்: வகுப்பறைகளில் விளையாடும் கைக்கிரிக்கெட், புத்தகக் கிரிக்கெட் விளையாட்டுகளைப்பற்றிச் சொல்லி, நீங்கள் விளையாட்டு பாடவேளையை அபகரித்து அவர்களை வகுப்பறையில் அடைக்கையில் அவர்கள் புதிய விளையாட்டுகளை உருவாக்கி இருந்த இடத்திலேயே விளையாடத் துவங்குவார்கள். இது அவர்களின் கற்பனையை விரித்தெடுக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு நன்மை பயப்பதல்ல என்றேன்.

கல்லூரி மாணவி ஒருவர் தான் நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் தரவரிசையில் இரண்டு லட்சத்திற்குப் பிறகான இடமெனவும் சொன்னார். கூடவே ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க வேண்டுமெனக் கேட்டார். ஆசிரியர்களின் பிரதிநிதி, மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி படம் நடத்துவதுதான் தங்கள் முதன்மைப் பணியெனவும், மற்ற அலுவல் பணிகளும் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை எனவும் மறுத்தார்.

"நீங்களெல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்கள், பெரும்பாலும் முதல் தலைமுறை மாணவர்கள் படிக்க வரும் இடம். தனியார் கல்லூரி மாணவர்களை விட அவர்களுக்கு வசதியும் வாய்ப்பும் குறைவு. கற்பித்தலை தாண்டி அரசின் கொள்கை வகுத்தலில் நம் மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் நீங்கள் பங்களிக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு கைப்பேசி வாங்க இயலாத அரசு பள்ளி மாணவர்களைத் தமிழகத்திலும் கேரளத்திலும் கண்டோம். கைப்பேசி இருந்தும் சிக்னல் கிடைக்காததால் வீட்டுக் கூரைகளில் அமர்ந்து பாடம் கற்றோர், சிக்னலுக்காக பல கிலோமீட்டர் நடந்த மலைவாழ் மக்கள் உள்ளிட்டோரைப் பார்த்தோம். வாய்ப்புகளில் சமநிலைத் தன்மை இல்லாத கல்விச் சூழலில், இவர்கள் எல்லோருக்கும் ஒரே தேர்வு என்பது எங்ஙனம் சரியாகும்?" எனக் கேட்டேன்.

ஓரிரு இடங்களில் அது போன்ற நிலை இருக்கலாம் ஆனால் கேரளத்தைப் பொருத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் பேசியும் இணைய வசதியும் இருந்தது/இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் ஆசிரியர்களின் பிரதிநிதி. நான் இப்போது வேறு விதமாகக் கேள்வியைத் தொடுத்தேன்: இங்கு இருப்பவர்களின் வகுப்பறையில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வைக் கடந்து மருத்துவப் படிப்பிற்குச் சென்றார்கள் எனக் கேட்டேன். "எத்தனையோ பேர் உண்டு!" என்ன சத்தமான பதில் வந்தது, பலரும் தலையாட்டி ஆமோதித்தார்கள். நான் அடுத்த கேள்வியைக் கேட்டேன்: அவர்களில் தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல் தேர்ந்தவர்கள் எத்தனைஅமைதி. சரி, கோச்சிங் சென்டர்கள் வசூலிக்கும் குறைந்த கட்டணம் என்று எதைச் சொல்வீர்கள்? மேடையில் இருந்த மாணவி ஒரு லட்சம் என்றார். நீங்கள், பிள்ளைகளே என அழைக்கும் அனைவரிடமும் லட்சங்கள் இருக்குமா? நீண்ட அமைதி. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் லட்சங்கள் செலவு செய்ய இயலாது, அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனிப்பயிற்சி மையங்களுக்குச் செல்லும் வழிமுறைகள் இங்கே உண்டு. அவை உண்டு உறைவிடப் பயிற்சிப் பள்ளிகளாகி நெடுங்காலம் ஆயிற்று; பள்ளிகள் அவர்களுக்கு தேவையான வருகைப் பதிவை வழங்கும், அவர்கள் பள்ளிக்கு வராமல் இரண்டு வருடங்களுக்கு முழு நேரமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுக்கலாம். இப்படி இருக்கையில் இதை எல்லோர்க்கும் சம வாய்ப்பு எனச் சொல்ல இயலுமா? உடன் தேர்வைப் பலமுறை எழுதி வெற்றிபெறும் மாணாக்கர்கள் அதிகம். அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பச்சூழல் பல்லாண்டுப் பயிற்சிக்கும் காத்திருப்புக்கும் ஏற்றதா? பதில் இல்லை.

எனவே இது போன்ற நடைமுறைச் சிக்கல்களை நீங்கள் அரசிற்குக் கொண்டு செல்ல வேண்டும். தமிழகம் நுழைவுத் தேர்வுகளை இதற்காகத்தான் எதிர்க்கிறது, இயலாத பட்சத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்திலும் பொறியியலிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையால் அடுத்தடுத்து நுழைவுத் தேர்வுகள் வரும், ஆசிரியர்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியைச் சந்திக்க நேரும். கடந்த பிப்ரவரி 16 அரசு/தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு அனுப்பிய சுற்றறிக்கையின்படி 2023-24 கல்வியாண்டில் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வில் (CUET - Common University Entrance Test) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எனவே இணையவழிக் கற்றல் பெருகும் காலத்தில் கற்பித்தல் மட்டுமல்ல, எதிர்வரும் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார் ஆக்குவதும், இத்தகைய அசமத்துவம் உள்ள ஒரு நாட்டில் போட்டித் தேர்வுகள் அவசியமானவயா எனக் கேள்விக்குள்ளாக்குவதும்தான் ஆசிரியர்களின் பணியாக இருக்க முடியும் எனச் சொன்னேன். ஒருவேளை நுழைவுத் தேர்வுகளால் பாதிப்பு இல்லை எனக் கருதினால் தமிழகத்தை போல, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை இவை எங்ஙனம் பாதிக்கிறது என்பதைக் குறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினேன். மௌனமே பதில்.

பிறகு, கற்பித்தல் குறித்த மாணவர்களின் வழக்கமான குற்றச்சாட்டுகள். ஆசிரியர்கள் நெளியத்துவங்கினர், ஒருவர் எழுந்து "உங்களின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் உங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் அல்லவா? அவர்களைப் பற்றி பேசுங்கள், அவர்களின் பெயரைச் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய்தார்கள்?" என்றார். எங்களுடைய பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சிலர் எங்களுக்கு எங்ஙனம் வழிகாட்டியாக இருந்தார்கள் எனச் சொன்னேன். மொழித்திறனை வளர்க்க ஆங்கில நாளிதழ்களைப் படிக்க ஊக்குவித்தார்கள், நடுப்பக்கக் கட்டுரைகளைக் குறித்துப் பேசி அடுத்தநாள் படித்தோமா என்பதையும் உறுதி செய்து கொண்டார்கள். அவர்கள்வழி அறிந்த ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மென்திறன் பயிற்சி வகுப்புகள் எங்களுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள எவ்வாறு உதவின எனப் பேசினேன். அடிப்படை சேமிப்பு, சமூக நலத்திட்டங்கள், உடல் நலம் குறித்த தகவல்களை எங்களுடன் எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதையும் சொன்னேன். அவர்களில் சிலர் நாங்கள் உயர்கல்வி செல்கிறோமா இல்லையா என்பதைக் கண்காணித்தார்கள், தற்போதைய அரசு அதைக் கட்டாயமாக்கியிருக்கிறது எனவும் சொன்னேன். ஆசிரியர் பிரதிநிதி, இங்கே அதை அரசுத் துறையே செய்கிறது, எங்களின் பங்களிப்பு அவசியமில்லை என்றார்.

மொழி, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய கருத்துக்களின் மீது ஒரு ஒவ்வாமை இருந்ததை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், எங்களின் அனைவரின் கருத்துக்கும் உடனடி மறுப்பினை ஆசிரியர்களிடம் எதிர்வினையாகக் காண முடிந்தது. அவ்வப்போது விவாதம் திசைமாறுகிறது என்கிற கருத்தும் பிரதிநிதியிடமிருந்து வந்தது. குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பிரதிநிதியால் மறுக்கப்பட்டு உடனடிப் பதில்கள் வழங்கப்பட்டு மேலும் சிந்திப்பதற்கான, விரித்தெடுப்பதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன. பிறகு, ஆசிரியரும் மாணவரும் விவாதிக்க நேரும்போது எப்போதும் ஆசிரியர்தானே சரியாக இருக்க முடியும்? அரங்கு எங்களுடையதென்றாலும் இப்படி ஒரு மறைமுக அதிகாரம் ஆசிரியர்களிடமிருந்து வெளிப்பட்டதைக் காண முடிந்தது.

இறுதியாக ஆசிரியர்களில் ஒருவர் நன்றியுரை வழங்கினார். அவர் தன் மகள் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறுப் படிப்பில் சேர்ந்து, பிற்காலத்தில் முனைவர் பட்டம் வாங்க விரும்பியதை நினைத்துக் கவலை கொண்டதையும், முனைவர் பட்டம் வாங்குகையில் அவர் எட்டியிருக்கும் வயதை நினைவுறுத்தி நல்வழிப்படுத்தி சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்த்திருப்பதையும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் நான் எவர் முன்னே அமர்ந்திருக்கிறேன் எனப் பொறி தட்டியது. அப்பல்கலைக்கழகத்தில் நுழைய இவர் பிள்ளை நிச்சயம் நுழைவுத் தேர்வு எழுதி இருப்பார், அதற்கெனத் தனிப்பயிற்சிக்கூட எடுத்திருப்பார். என் முன்னே அமர்ந்திருப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிப்பார்கள், நுழைவுத் தேர்வுகளுக்குப் பல லட்சங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் இருந்து அரசுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான ஒரு கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புக் குறைவு. எல்லோரிடமும் போட்டிபோடுவதற்குப் பதில் பொருளாதார வலுவுள்ள உயர்குடிகள் தமக்குள் போட்டிபோட்டுக்கொள்வது ஆரோக்கியமானதுதான் இல்லையா?!