அச்சிட்ட தாளில் கண்டிருக்கலாம்...
யாரோ ஒரு மழலை தவறவிட்ட
வீட்டுப்பாட ஏட்டில் கண்டிருக்கலாம்…
சன்னலோர உலகம் நமைவிட்டோடுகையில்
ஏதேனுமொரு பலசரக்குக் கடைமுகப்பிலோ
ஏதேனுமொரு மருந்துக்கடை முகப்பிலோ
எதார்த்தமாய்க் காண நேர்ந்திருக்கலாம்...
ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் அடித்துப்பிடித்த
பேருந்தின் முன் இருக்கையிலோ,
அண்ணாச்சி கடையில் வாங்கிவந்த
பொருளின் மேலுறையிலோ கண்டிருக்கலாம்,
விருந்து சென்ற வீட்டில்
புதிதாய்க் காண நேர்ந்த
உறவுக்குச் சொந்தமாயிருக்கலாம்...
வீட்டிற்கு வந்த குழந்தை
தேனாய் உரைக்கக் கேட்டிருக்கலாம்,
தூர அழைக்கும் குரலில் கேட்டிருக்கலாம்,
வேலைக்குச் சென்ற இடத்தில்
கேட்டிருக்கலாம்,
செய்தித்தாளில் கண்டிருக்கலாம்,
விரும்பிச் சென்ற திரைப்படத்தின்
ஆரம்ப நொடிகளில் கண்டிருக்கலாம்..,
முன்பின் அறியா ஊரில் நெடுநேரமாய்த்
தேடித்திரிந்த பேருந்தின் முகப்பிலிருக்கலாம்,
புதிதாய் வாங்கிய நோட்டுப்புத்தகத்தின்
அடையாளப் பதிவாய் இருக்கலாம்,
புதிதாய்ச் சென்ற வகுப்பறையின்
மேசைக் கிறுக்கல்களில் கண்டிருக்கலாம்,
நீண்டதொரு பயணத்தில்,சிவப்புவிளக்கின் முன்
ஆசுவாசமாய்க் காத்திருக்கும் நொடிகளுக்கு மத்தியில்
முன்நிற்கும் வாகனத்தில் கண்டிருக்கலாம்...
வேண்டா வெறுப்பாய் வரன் தேடுகையில்
வந்திருக்கும் தெரிவில் ஒன்றாய் இருக்கலாம்...
எழுத்தோ சத்தமோ அல்லது ஏதேனுமொரு வடிவிலோ
உம் பெயர் மட்டும் எனைச் சுற்றிக்கொண்டே இருக்கலாம்,
அந்நேரத்தில்...
உள்ளொளிந்திருக்கும் நீ எழுந்தோடி வந்தென்னை
உச்சிமுகரலாம், ஆரத்தழுவலாம், தட்டிக்கொடுக்கலாம்...
நான் அக்கணம் எனைமறந்து உச்சரித்துப் பார்க்கலாம்
உள்ளுக்குள் உன் பெயரை மட்டும்.

No comments:
Post a Comment