"சந்தோசமா இருக்க பணம் தேவையில்ல,மனசிருந்தா
போதும். போய்ட்டு வாங்க:-/" HOD இதச் சொல்லித்தான் பணப்பிரச்சனை
காரணமா வரமாட்டேன்னு சொன்னவங்களோட நடந்த பேச்ச முடிச்சுவச்சாங்க...சத்தியமங்கலத்துல
இருக்க ஒரு சக்கரை ஆலைக்கு போறதுக்கான பேச்சுதானது. போறதுக்காக முதல்ல போட்ட திட்டத்துல
வந்த ஒரு சின்ன மாற்றத்துனாலதான் அவசரமா இந்த முடிவ எடுக்கவேண்டியதாப் போச்சு. அது
என்னான்னு சொல்றதுக்கு இங்க கண்டிப்பா ஒரு கொசுவர்த்திச் சுருள போட்டுத்தான் ஆகனும்..
சில நாட்களுக்கு முன்...
Lab-ல இருக்கும் போது பொறுப்பாசிரியர்
வந்து, "இங்க பாருங்கப்பா... நாம இந்த மாச கடைசி வாரத்துல ஒரு நாள் பெங்களூர்ல
இருக்குற ******
pharmaceuticals-க்கு
IV போலாம்னு இருக்கோம், அதுக்கான
permission
வாங்குற வேலையெல்லாம்
நடந்துட்டு இருக்கு, சீக்கிரம் சொல்றோம், நீங்களும் ready-ஆ இருங்க"னு சொன்னாரு.(That இன்பத் தேன் வந்து பாயுது
காதினிலே moment)
கொஞ்ச நாள்ல, அந்த நாள்
செப்டம்பர் 24ன்னு முடிவாச்சு.அதுக்கப்புறம்
Bus-ல போறதால குடுக்க வேண்டிய
பணத்த கணக்குபோட்டு பாக்கும்போது செலவு அனுமானிச்சதவிட கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு..காலக்கெடு
கம்மியா இருந்ததால Train-லயும் Reserve-பன்னி போகமுடியாதுன்னு
தெரிஞ்சதுக்கப்புறம் பெங்களூர் பயணம் இனிதே தள்ளி வைக்கப்பட்டது.
பிறகு வாங்குன Permission வீணாய்டக்கூடாதுன்றதுக்காக
அதே தேதில போகனும்னு முடிவு செஞ்ச இடம்தான் சத்தியமங்கலம்.!
செப்டம்பர் 24,அதிகாலை 3 மணி...,
நல்லா தூங்கீட்டு இருந்தேன்.
4:30 மணிக்கு alarm அடிச்ச பின்னாடி எந்திரிச்சு கிளம்பி நண்பர்களோட Collegeக்கு 6:30கிட்ட வந்து சேந்தேன். வழக்கம்போல, Fix பன்ன நேரத்த விட 1 மணி நேரம் கழிச்சு எல்லாரும் (Teachers, Non-teaching staff members, Research scholars & Studentsனு கிட்டத்தட்ட 40 பேர்) வந்த பின்னாடி காலை உணவோட கோயமுத்தூர்ல இருந்து 7:45க்கு கெளம்பினோம்.
4:30 மணிக்கு alarm அடிச்ச பின்னாடி எந்திரிச்சு கிளம்பி நண்பர்களோட Collegeக்கு 6:30கிட்ட வந்து சேந்தேன். வழக்கம்போல, Fix பன்ன நேரத்த விட 1 மணி நேரம் கழிச்சு எல்லாரும் (Teachers, Non-teaching staff members, Research scholars & Studentsனு கிட்டத்தட்ட 40 பேர்) வந்த பின்னாடி காலை உணவோட கோயமுத்தூர்ல இருந்து 7:45க்கு கெளம்பினோம்.
புறப்பட்ட உடனே வகுப்புத்தோழர்களும்
Seniors-ம் சேர்ந்து ஆட ஆரம்பிச்சாங்க..,ரெம்ப
நல்லா ஆடுனாங்க.
நாலாம் வகுப்பு படிக்கறப்ப..,மோதிலால்
Teacher வந்து “ஆண்டுவிழா வரதால
எல்லாரும் கலை நிகழ்ச்சில கலந்துக்கங்க”னு சொன்னதால நாடகத்துல நடிக்கலாம்னு முடிவுபன்னி
கலந்துக்கிட்டேன்,அப்பறம் அஞ்சாம் வகுப்புலயும்...
விளைவு?!
.
.
ஆடத் தெரியல.
வழக்கம்போல உக்காந்து வேடிக்க
பாத்துட்டு இருந்தேன்.
அப்புறம் ஆடுறவுங்க எல்லாம்
வற்புறுத்தி கூப்ட்டதால நானும் எழுந்திருச்சு நின்னுட்டே வரவேண்டியதாப் போய்டுச்சு.
ஆம், நின்று கொண்டே வந்தேன்
எனச் சொல்வதில் எனக்கு அளவில்லாத கர்வமுண்டு... இந்த 21ஆம் நூற்றாண்டில் காலை வேளையில்
பெருநகரச் சாலைகளில் பேருந்தினுள் கம்பியைப் பிடிக்காமல் நடனமாடிக்கொண்டு வருவதா பெரிய
விடயம்?!.. நிற்பதுதானே?!
சிறிது நேரக் கொண்டாட்டங்களுக்குப்
பிறகு 10
மணிக்கு சத்தியமங்கலம்
பண்ணாரியம்மன் கோவிலுக்கு போய்ச் சேர்ந்தோம்.
தரிசனத்தையும் காலை உணவையும் முடிச்சிட்டு
அங்கிருந்து கிளம்பி 11 மணிக்கு சர்க்கரை ஆலைக்கு
போய்ட்டோம்.
அங்க கரும்புல இருந்து
சர்க்கரை எடுக்குற எல்லா Process-ஐயும் கிட்டத்தட்ட ஒரு
மணி நேரம் சுத்திப்பாத்தோம், ஒரு நாளுக்கு மட்டும் அங்க 50 ton சர்க்கர தயாரிக்கறாங்கன்னா
பாருங்களேன்.! அது மட்டுமில்லாம அவங்களுக்கு தேவையான மின்சாரத்தையும் கிடைக்கிற சக்கையிலிருந்து
தயாரிக்கிறாங்க..எஞ்சி இருக்குற mud waste-களும் உரமா போய்டுது. அங்க இருந்த கொஞ்ச நேரமும்
கரும்பு, சர்க்கரைனு தின்னுட்டே இருந்ததால இத இனிப்பான அனுபவம்னுதான் சொல்லனும்.! பிறகு
அதோட Biproduct
industry-ஆன
Alcohol
manufacturing-ஐயும்
பாத்துட்டு மதியம் சாப்ட்டதுக்கப்புறம் 2 மணிக்கு கிளம்பீட்டோம்.
அங்கிருந்து கொடுவேரிக்குப்
போற வழில பேருந்தின் மேற்கூரை, தளம், இருக்கைகளின் நலம் கருதி அதுவரைக்கும் நான்
"பாக்காத..." புதுப்படம் ஒன்ன driver போட்டாரு. உண்ட களைப்புல எல்லாரும் கம்முனு வந்தோம்..ஒரு
20 நிமிசத்துக்கப்புறம்,
"கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலென…"ன்னு ஆரம்பிக்கிற மாதிரி ஒரு
இடம் வந்தது ஏரிய நெருங்கீட்டோம்னு காட்டுச்சு...
அங்க போய் கிட்டத்தட்ட
ஒரு மணி நேரத்துக்கும் மேல தண்ணில ஆடுனோம். ஆச்சரியம் என்னன்னா என் வகுப்புல எனக்கும்
இன்னொருத்தருக்கும் தவிர மத்த எல்லாருக்கும் நீச்சல் தெரிஞ்சிருந்துச்சு.! பிறகென்ன?!..,எல்லோரும்
நீந்திக்களித்திருக்க நாங்களிருவரும் அழுக்குத் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தோம்.
(க்கும்..நீச்சல் கத்துக்கறேன்னு சொல்லி ரெண்டு தடவ தண்ணியக் குடிச்சதையெல்லாம் சொல்லிக்கிட்டா
இருப்பாங்க?!)
அங்கிருந்து 5:30 மணிக்கு கிளம்பி பொறுப்பாசிரியர்
வீட்டுக்கு போய் ஒரு Refreshment-க்கு அப்புறம் படம் பாத்துக்கிட்டே
7 மணிக்கு College வந்து சேர்ந்து அங்கிருந்து
எல்லோரும் அவங்கவுங்க வீட்டுக்கு போனோம்.
இப்பதான் First year-ன்றதால எல்லோரோடையும் கொஞ்ச
நேரம் செலவளிக்கறதுக்கு இந்த நாள் ரெம்ப உதவியா இருந்துச்சு..
சில நட்புக்களையும் சந்தோசங்களையும்
நேரம் கொடுத்துதான் பெற முடியும்றது எவ்வளவு பெரிய உண்மை.!
சந்தோசமா இருக்க பணம் மட்டும் போதாது,மனசும் வேணும்.
No comments:
Post a Comment