https://www.flickr.com/photos/todorrovic/12198142045 |
சென்ட்டரில் இருப்பதுதான்
பாதுகாப்பானது
வண்டி சாய்க்கூடாதென்றால்
சென்ட்ரல் ஸ்டாண்டுதான்
ஷேர் ஆட்டோவென்றாலும் சென்ட்டர்தான்
எந்தப் பக்கம் சரிந்தாலும்
ஒரு அடி விழாது
சென்ட்டர்
சில சமயங்களில்
திருட்டு
முழி
இடதா
வலதா என்கையில்
அது
அப்பாவி ஆகிறது
சென்ட்டர் சில சமயங்களில்
குறுக்குச் சந்து
ஓரங்கட்டும் காவலரால்தான்
அது நடுரோட்டுக்கு மாறுகிறது
சென்ட்டர் பல சமயங்களில்
சந்தர்ப்பவாதி
ரஜினிக்கா கமலுக்கா என்கையில்
அது கொள்கையைக் கேட்டு நகர்கிறது
சென்ட்டரில் இருப்பதுதான்
பாதுகாப்பானது
சென்ட்டரில்
இருப்பதனால்தான்
நல்ல பெயர் கிடைக்கிறது
தாலி கட்டப் பெண் கிடைக்கிறது
தாவ அதிக வாய்ப்பும் கிடைக்கிறது
தாலி கட்டப் பெண் கிடைக்கிறது
தாவ அதிக வாய்ப்பும் கிடைக்கிறது